Last Updated:
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், திருச்சூர் சாவக்காடு பகுதியில், ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மாணவி விழுந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவக்காடு பேருந்து நிலையத்திலிருந்து குன்னங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், கல்லூரி மாணவியும், 3 மாத கர்ப்பிணியுமான 20 வயதான பாத்திமா பயணம் செய்துள்ளார். சாவக்காடு தெற்கு புறவழிச் சாலை வளைவில் பேருந்தை அதிவேகமாக திருப்பியபோது, பின்பக்க படிக்கட்டு வழியாக பாத்திமா சாலையில் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.


