Last Updated:
புதிய MDR நடைமுறை மூலம் UPI அமைப்பை தற்சார்புடையதாக மாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய MDR கட்டணத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பூஜ்ஜியம் புள்ளி 4 சதவீத MDR கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. இதை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
UPI கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு யுபிஐ முறை அறிமுகம் செய்யப்பட்டபோது எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய MDR நடைமுறை மூலம் UPI அமைப்பை தற்சார்புடையதாக மாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூஜ்ஜிய MDR நடைமுறை காரணமாக அரசின் நிதிச்சுமை அதிகரிப்பதாக நாடாளுமன்ற நிதிக்குழு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், UPI அமைப்பின் நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய வருவாய் வழிமுறை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.


