Last Updated:
அடுத்த 90 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிவியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதார சுணக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொருளாதார சுணக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் லா பாஸில் குவிந்த ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அடுத்த 90 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.