
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா ஜோடி, தங்களது 20 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இதனைத் கொண்டாடும் விதமாக, இருவரும் வெளிநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது திருமணப் பிரமாணங்களைப் புதுப்பித்துள்ளனர். எளிய முறையில் நடைபெற்ற இத்திகழ்வில், நடிகர் கார்த்தி, சூர்யாவின் மகன், மகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திரையுலகில் பலரது திருமணங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்ற பொதுவான பார்வை நிலவும் சூழலில், கடந்த 20 ஆண்டுகளாகத் தனிப்பட்ட வாழ்விலும் சினிமாவிலும் பலருக்கும் முன்மாதிரி இணையாக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

இந்த விடியோ இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் குவித்து வரும் நிலையில், பிரபல நடிகரான மாதவன், “நீங்கள் இருவரும் மிகச்சிறந்த உதாரணம் நண்பர்களே… இன்னும் பல பத்தாண்டுகள் மிக, மிக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பல இளம் நடிகைகளும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.





