Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
திருப்பூர்: நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு வந்தால், விஜய் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அஜித் குமாரின் ரேஸை தொடங்கி வைக்க விஜய் சென்றது அன்பினால் அல்ல என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன், லண்டன் சென்று கார் ரேஸை தொடங்கி வைப்பது போல் விஜய் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல் கார் ரேஸ் மைதானத்தையும் பார்வையிட்டார். அஜித் குமார் – விஜய் இருவரும் சந்தித்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய டிரெண்டாகியது. இதன்பின் இருவரும் இணைந்து போட்டோஷூட் நடத்தினர்.

விஜய்யின் இந்த சந்திப்புக்கு பின்னணியில் அஜித் குமார் ரசிகர்களின் வாக்குகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. தென் மாவட்டங்களில் அஜித் குமாருக்கு இருக்கும் ரசிகர்களில், சில லட்சம் பேர் ஆதரித்தாலே அது லாபம் என்று விஜய் கணக்கு போட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல் அஜித் குமார் தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
இப்படியான சூழலில் விஜய்யுடன் நெருக்கம் காட்டுவது அவரின் வியாபாரத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய சந்திப்பாக இது அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸை தொடங்கி வைப்பதற்காக லண்டன் சென்றார் விஜய். மக்கள் பணத்தை தொட மாட்டேன் என்று சொன்ன விஜய், இன்று மக்கள் பணத்தில் அஜித் குமார் கார் ரேஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்றுள்ளார். விஜய்க்கு எதிராக சினிமாவில் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் நடிகர் என்றால் அது அஜித் குமார் தான்.
அவர் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் அரசியலில் இறங்கினால், விஜய் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும். அஜித் குமாரின் ரேஸி தொடங்கி வைக்க விஜய் சென்றது அன்பினால் அல்ல. நீயும் என் நண்பன் தான்.. அரசியலுக்கு வந்துவிடாத என்று சொல்வதற்காக தான் லண்டன் சென்றுள்ளார். இதுதான் உண்மை. சென்னையில் செய்ய வேண்டிய வேலையை மறந்து லண்டன் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

