இதனால் தங்கத்தின் விலை உயருமா? இந்த அறிவிப்பால் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்காது. தங்கத்தின் தினசரி விலையானது சர்வதேச பொருளாதாரக் காரணிகள், நாணய மதிப்பு, இறக்குமதி வரிகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், நகை வாங்கும்போது கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக நகைக்கடைகளில், தங்கத்தின் விலை, எடை ,செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி, ஹால்மார்க்கிங் கட்டணம் என்ற அடிப்படையில் பில் கணக்கிடப்படும். தற்போது ஹால்மார்க்கிங் கட்டணம் உயர்ந்துள்ளதால், ரசீதில் அதற்கேற்ப சிறிய அளவிலான கட்டண உயர்வு பிரதிபலிக்கும். தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கம் ரூ.70,000-ஐ தாண்டி விற்பனையாகும் சூழலில், ஒரு நகைக்குக் கூடுதலாக 30 ரூபாய் செலுத்துவது வாடிக்கையாளர்களுக்குப் பெரிய சுமையாக இருக்காது.

