இந்தியா மீது 100% வரி.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. BRICS கூட்டம் முடிந்ததும் நடக்கும் சம்பவம்..!
உலகில் பவர் ஈக்வேஷன் பெரிய அளவில் மாறி வரும் வேளையில் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் மாபெரும் கூட்டம் சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பிரிக்ஸ் நாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரி விதிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
டிரம்ப் நவம்பர் மாதத்தில் மிட்டேர்ம் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் வேளையில் இந்த வரி விதிப்பு மூலம் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அமெரிக்காவின் வரிக்கு இணையாக கனடா அரசு போல் இந்தியாவும், சீனாவும் வரி விதிக்கும் என எதிர்பார்ப்பும் நிலவுகிறது, இதனால் உலகளாவிய வர்த்தக போர் வெடிக்கலாம்.

ரஷ்யா-வை கட்டம் கட்டும் வகையில் அமெரிக்கா உருவாக்கிய Russia Sanctions Bill தற்போது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா மூலம் ரஷ்யாவிடம் இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபரான டிரம்ப்-க்கு கிடைக்கும்.
இந்த முக்கியமான மசோதா நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரம், வர்த்தக தடை தொடர்பான மசோதாவை Lindsey O Graham உருவாக்கினார்.
இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் செனேட் அளவில் ஒப்புதல் பெற்று நேற்று, நாடாளுமன்ற விதிகள் கமிட்டி மத்தியிலான ஒப்புதலுக்கு வந்தது. இந்த வாக்கெடுப்பில் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்கள் ரிபப்ளிக் கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளித்த நிலையில் இந்த மசோதா இறுதி ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு வருகிறது.
மிட்டேர்ம் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சியினர் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பது அமெரிக்க அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.
இந்த மசோதா ரஷ்யா – ஈரான் என இரு நாடுகள் மீது இருந்தாலும், ரஷ்யா உடனான வர்த்தக தடையை அதிகம் டார்கெட் செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தும் வேளையில், ரஷ்யா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் வாயிலாக தான் நிதி ஆதாரத்தை திரட்டுகிறது என அமெரிக்கா தீவரமாக நம்புகிறது.
இதனாலேயே ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்பட மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் விதிக்கப்படும், இதனால் 1000 ரூபாய் மதிப்புடைய பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு வரும்போது 2000 ரூபாயாக உயரும்.
இது அமெரிக்க நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் சுமையாக மாறும் காரணத்தால் 100 சதவீதம் வரி இல்லாத நாடுகளிடம் இருந்து பொருட்களை அமெரிக்க வர்த்தகர்கள் வாங்குவார்கள். இதனால் இந்திய ஏற்றுமதி சந்தை, வேலைவாய்ப்பு, உற்பத்தி என அனைத்தும் பாதிக்கப்படும்.

