• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்.. 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!! | UPI No Longer Free? NPCI Steering Committee Introduces MDR Charge Up to ₹300 Above ₹2,000

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்.. 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!! | UPI No Longer Free? NPCI Steering Committee Introduces MDR Charge Up to ₹300 Above ₹2,000
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்.. 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!!

இந்திய டிஜிட்டல் பேமெண்ட் துறையில் பெரும் புரட்சி செய்த யூபிஐ-யில் இதுநாள் வரையில் கட்டணமில்லாமல் செயல்பட்டு வந்த நிலையில், இனி கட்டணம் விதிக்கப்படும் என யூபிஐ Steering Committee செவ்வாய்க்கிழமை மாலையில் நடந்த கூட்டத்தில் அறிவித்துள்ளது. இப்புதிய கட்டணம் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

யூபிஐ பேமெண்ட் முறையில் 3 விதமான பேமெண்ட்கள் நடக்கும், தனிநபர் – தனிநபர் மத்தியில், தனிநபர் – வர்த்தகர்கள் மத்தியில், தனிநபர் – சேவைகளுக்கு (மியூச்சவல் பண்ட், பங்குச்சந்தை போன்றவை).

UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்..  300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!!

இதில் தனிநபர் மத்தியிலான பேமெண்ட்-க்கு எவ்விதமான கட்டணமும் இல்லாமலும், எவ்விதமான வரம்பும் இல்லாமலும் பேமெண்ட் செலுத்த அனுமதிக்கப்படும். மற்ற பேமெண்ட் முறைகளில் 2000 ரூபாய்க்கு அதிகமாக செய்யப்படும் பேமெண்ட்களுக்கு MDR எனப்படும் Merchant Discount Rate கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று யூபிஐ Steering Committee வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2000 ரூபாய்க்கு மேல் நடக்கும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் MDR கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் வரம்பு விதிக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக, விக்னேஷ் என்பவர் ஒரு ஷாப்பிங் மாலில் 10,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை UPI மூலம் செலுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். இதற்கு 0.4 சதவீத MDR கட்டணம் செலுத்த வேண்டும், அப்படியானால் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுவே ரூ.2,000 ரூபாய் பேமெண்ட் என்றால் ரூ.8 கட்டணம், 75,000 ரூபாய் மதிப்பிலான பேமெண்ட் என்றால் ரூ.300 கட்டணமாகும். இதுவே விக்னேஷ் நகை கடையில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் என பேமெண்ட் செய்தாலும் MDR கட்டணம் என்பது ரூ.300-ஐ தாண்டாது.

மேலும் MDR என்பது மக்களிடம் வசூலிக்கப்படும் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் அல்ல. யூபிஐ பேமெண்ட் முறையை பயன்படுத்தும் வணிகர்களிடம் வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு வசூலிக்கும் கட்டணம் ஆகும். இந்த கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கும் உரிமை வணிகர்களுக்கு இல்லை.

ஆனால் கட்டணம் விதிக்கப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை குறையும், மக்கள் மீண்டும் பணத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யூபிஐ Steering Committee அனைத்து துறைகளுக்கும் 0.4 சதவீதம் என்ற ஒரே MDR கட்டணத்தை விதிக்கவில்லை, மாறாக சமானிய மக்கள் அன்றாடும் செலவு செய்யும் இடங்களில் சில முக்கியமான துறைகளுக்கு தனி சலுகை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக டெலிகாம் சேவைகள், ரயில்வே, பெட்ரோல் பங்க், காப்பீடு போன்ற பிரிவுகளில் செய்யப்படும் யூபிஐ பேமெண்ட்-க்கு 5 ரூபாய் என்ற நிலையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுவும் 2000 ரூபாய்க்கு அதிகமான தொகை செலுத்தும் போது தான்.

இதேபோல் மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை உள்ளிட்ட கேப்பிட்டல் மார்கெட் பேமெண்ட்-க்கு 0.02 சதவீதம் MDR கட்டணம் வசூலிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு டிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்குவிக்க UPI-ஐ அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதை வேகமாக மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக MDR கட்டணத்தை ஜீரோவாகவே வைத்திருந்தது.

தற்போது பரிவர்த்தனை எண்ணிக்கையும், பரிவர்த்தனை மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த கட்டமைப்பை பணமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த MDR கட்டணம் மூலம் போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் நிறுவனங்களும், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ வங்கி பலன் அடைய உள்ளது.

யூபிஐ நெட்வொர்க்கில் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்ட போன்பே, கூகுள்பே, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி இதன் மூலம் அதிகளவிலான வருமானத்தை ஈட்ட உள்ளது. மேலும் MDR கட்டணம் புதியது அல்ல டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு-க்கு வசூலிக்கப்படுபவை தான்.

Share This Article

English summary

UPI No Longer Free? NPCI Steering Committee Introduces MDR Charge Up to ₹300 Above ₹2,000

UPI No Longer Free? NPCI Steering Committee Introduces MDR Charge Up to ₹300 Above ₹2,000 — UPI இனி இலவசம் கிடையாது.. மக்களை உஷார்.. 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க உத்தரவு!!

Story first published: Tuesday, September 15, 2026, 20:34 [IST]

Read More

Previous Post

இந்த ஆட்டம் போதுமா.. சம்பவக்காரன் கம்பேக்.. 20 பந்துகளில் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்! | Sanju Samson: Sanju Samson Scored a 20 ball fifty against Afghanistan in the 2nd T20 at Delhi

Next Post

பினாங்கில் குழந்தையைப் புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட குழந்தை பராமரிப்பாளர், குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

பினாங்கில் குழந்தையைப் புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட குழந்தை பராமரிப்பாளர், குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin