Cricket
oi-Yogeshwaran Moorthi
டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக தடுமாறி வந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பாக நிதிஷ் ரெட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அபிஷேக் சர்மா தொடக்கத்திலேயே வெளுத்து வாங்க, 3 ஓவர்கள் வரை சஞ்சு சாம்சன் நிதானம் காட்டினார். 5வது ஓவரை வீசிய ஒமர்சாய் பவுலிங்கில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினர்.
பின்னர் முகமது நபி வீசிய 6வது ஓவரில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்ப்ட 27 ரன்கள் விளாசப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் சஞ்சு சாம்சன் தனது மேஜிக்கை களத்தில் நிகழ்த்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் அடிக்கும் அதிவேக அரைசதமாக இது அமைந்தது.
பின்னர் ரஷித் கான் பந்தை அட்டாக் செய்த சஞ்சு சாம்சன் 22பந்துகளில் 4 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் இந்திய அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 100 ரன்களாக இருந்தது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு சஞ்சு சாம்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 42 ரன்களை மட்டுமே சஞ்சு சாம்சன் எடுத்திருந்தார். இதனால் மீண்டும் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை வந்துவிட்டதாக சஞ்சு சாம்சனை சாடி வந்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சனின் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. இதனால் அவரை பெஞ்ச் செய்ய வேண்டிய சூழல் அடுத்த போட்டியிலும் ஏற்படாது என்று பார்க்கப்படுகிறது.

