ஏஐ-க்கு ஃபுல் ஸ்டாப் பட்டனை தட்டிய OpenAI.. புதிய கதவை திறந்ததுள்ளது!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏவுகணை தயாரிக்கவும், ஆபத்தான வெடிக்குண்டு தயாரிக்கவும், கொடிய வைரஸ் உருவாக்கி அதை பயோ ஆயுதமாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆந்திரோபிக் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியான பின்பு ஒட்டுமொத்த ஏஐ துறையும் அதன் வளர்ச்சியை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும் ஏஐ கட்டமைப்புகள் நம் கையைவிட்டு போகும் முன்பு அதை முறையாக கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தன.
இதற்காக அமெரிக்காவின் முன்னணி ஏஐ மாடல் உருவாக்கும் நிறுவனங்களான ஓப்பன்ஏஐ, ஆந்திராபிக், கார்க் ஆகியவை ஏஐ மாடல் மேம்பாட்டு பணிகளின் வேகத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் GPT-6 Astra என்ற புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்த ஓப்பன்ஏஐ தனது கனவு திட்டமான ஏஐ அடிப்படையிலான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரிக்கும் திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது.

சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓப்பன்ஏஐ ஏற்கனவே டிசைன் நிறுவனமான io என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் டிசைன் தலைவர் ஜானி ஐவ் உருவாக்கியது. அடுத்தாக ஆப்பிள் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கிய ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் கம்பியூட்டேஷனல் போட்டோகிராபி Glass Imaging என்னும் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
சாம் ஆல்ட்மேன் ஆரம்பம் முதல் ஏஐ அடிப்படையிலான கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அறிமுகம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. ஏஐ அடிப்படையிலான ஸ்மார்ட்போன் துவங்கி மக்கள் பயன்படுத்தும் பல கருவிகளை ஏஐ உடன் இணைத்து உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளார்.
சமீபத்தில் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜானி ஐவ் கூட்டணி Dough Nut வடிவிலான ஒரு ஏஐ ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சந்தையில் இருக்கும் ஸ்பீக்கர் + ஏஐ சாட்பாட் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன் திட்டத்தை துவங்குவதற்காக Glass Imaging என்னும் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா-வை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Glass Imaging நிறுவனம் 2019ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான Ziv Attar மற்றும் Tom Bishop ஆகியோர் இணைந்து உருவாக்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற முதலீட்டு சுற்றில் Glass Imaging நிறுவனத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது OpenAI 300 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
ஓப்பன்ஏஐ நிறுவனம் Glass Imaging நிறுவனத்தை வாங்க என்ன காரணம்..? ஸ்மார்ட்போன் கேமராவில் எடுக்கப்படும் போட்டக்களின் தரத்தை மேம்படுத்த, கேமரா வன்பொருள் மட்டுமே நம்பியிருக்காமல், சாப்ட்வேர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என மூன்றையும் இணைத்து இந்த நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
இதற்காக neural network-களை பயன்படுத்துகிறது என்பது தான் முக்கியமான விஷயம். இதன் மூலம் ஸ்மார்ட்போனில் DSLR கேமராவுக்கு இணையான புகைப்படத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டு உள்ளது Glass Imaging நிறுவனம்.
Glass Imaging நிறுவனத்தை வாங்கியிருப்பது மூலம் OpenAI தனது AI மாடலை தாண்டி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் தீவிரமாக நகர்ந்து வருவதை காட்டுகிறது. இதன் மூலம் சாம் ஆல்ட்மேன் ஏஐ ஸ்பீக்கருக்கு அடுத்தப்படியாக ஏஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

