கோலாலம்பூர்:
மலாக்கா, புக்கிட் பெருவாங் பகுதியில் சைக்கிளின் முன் சக்கரம் சாக்கடை இரும்பு மூடியின் இடைவெளியில் சிக்கியதால் கீழே விழுந்து பலத்த காயமடைந்த 36 வயது சமையல்கலைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 14) மாலை 7.10 மணியளவில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நபர் தாமான் பூங்கா ராயாவைச் சேர்ந்த அகமட் ஷாஸ்லி ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது சைக்கிளில் சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சைக்கிளின் முன் சக்கரம் சாக்கடை இரும்பு மூடியின் கம்பிகளுக்கு இடையே சிக்கியுள்ளது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக மீட்கப்பட்டு மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மலாக்கா தொங்கா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஹலிம் அபாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
The post சைக்கிளின் சக்கரம் சாக்கடை மூடியில் சிக்கியதில் சமையல்காரர் பலி! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

