• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடும் வறட்சி, வரலாறு காணாத வெள்ளம்.. 2027 வரை நீடிக்கும் எல் நினோவின் உக்கிரம்! விபரம் என்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
கடும் வறட்சி, வரலாறு காணாத வெள்ளம்.. 2027 வரை நீடிக்கும் எல் நினோவின் உக்கிரம்! விபரம் என்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 15, 2026 6:19 PM IST

இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது

மாதிரி படம்
மாதிரி படம்

காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகிவரும் மிகக் கடுமையான ‘சூப்பர்’ எல் நினோ (Super El Niño) காலநிலை மாற்றம் குறித்து, காலநிலை நிபுணர் பில் மெக்குயர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. வழக்கமாக கடல் வெப்பநிலை 2°C வரை அதிகரித்தால் அதை ‘சூப்பர் எல் நினோ’ என்பார்கள். ஆனால், தற்போது உருவாகிவரும் எல் நினோ வெப்பநிலை 4°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உலகளாவிய காலநிலை மாற்றங்களையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், இதை ‘ஹைப்பர் எல் நினோ’ என்றும் குறிப்பிடலாம்.

உலகளாவிய மற்றும் உள்ளூர் தாக்கங்கள்

1997-98 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ உலகளவில் 5.7 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. தற்போதைய எல் நினோ அதைவிட மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால், உணவுப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும். அமேசான் காடுகள், தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சியும் காட்டுத்தீயும் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கலிஃபோர்னியா மாநிலத்தில் ‘வளிமண்டல ஆறுகள்’ (Atmospheric rivers) மூலம் கொட்டித் தீர்க்கும் மழையால் ‘ஏஆர்-கே-ஸ்டார்ம்’ (ARkStorm) போன்ற பேரழிவு ஏற்பட்டு 1 டிரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பிரித்தானியாவில் சுழல் காற்றுகளும் கடும் வெள்ளப்பெருக்கும் உருவாகும்.

இந்த எல் நினோவின் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.6°C முதல் 1.7°C வரை உயரக்கூடும். இது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் உடனடியாகக் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் பேராபத்து நிச்சயம் என ஆய்வாளர் பில் மெக்குயர் எச்சரிக்கிறார்.

Read More

Previous Post

சூப்பர் பவராக மாறப்போகும் சவுதி அரேபியா.. அமெரிக்கா முதுகை காட்டிய ஒரு வாரத்தில்.. சிக்கலில் டிரம்ப் ! | Next Superpower Shift? Saudi Finds Huge Uranium Deposit as Tensions with US Administration Rise

Next Post

குப்பை வீசியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசியாவின் முதல் இந்தோனேசிய ஆண். – Malaysiakini

Next Post

குப்பை வீசியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசியாவின் முதல் இந்தோனேசிய ஆண். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin