Last Updated:
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை பல மாதங்களாக பின்தொடர்ந்து வந்த இளைஞர், இறுதியில் அவரை துரத்திச் சென்று சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சாக்ரமெண்டோ நகரம் அமைந்துள்ளது. இங்கு 38 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாலினி தாகூர் என்பவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியில் பணியாற்றி வந்த 22 வயதான ரோஹித் என்பவருக்கும் ஷாலினிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு கட்டத்தில் ஷாலினியை பின்தொடர்வதும், அவரை தொந்தரவு செய்வதும் ரோஹித்தின் நடவடிக்கையாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், தனது காரின் கீழ் Apple AirTag ஒன்று இருப்பதை ஷாலினி கண்டுபிடித்துள்ளார். அந்த சிறிய சாதனத்தின் மூலம் தனது நடமாட்டம் கண்காணிக்கப்படுவதை அவர் உணர்ந்துள்ளார்.

