இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசிய விவகாரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெளிப்படையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில்,
”வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை (I don’t care). அது அவர்களுக்கு நல்லதுதான்.
சுமூகமான உடன்படிக்கை
ஈரான் நாடு அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான உடன்படிக்கைக்கு வரக் கடுமையாக முயற்சிக்கின்றது. இதற்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருகிறது.

எனினும், அமெரிக்காவிற்கு முழுச் சாதகமான மற்றும் தகுந்த சரியான ஒப்பந்தத்தை மட்டுமே தனது நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

