கட்சி ரீதியாக ஆண்டாண்டு காலமாக கோரி நிற்கின்ற இந்த சர்வதேச விசாரணை எதற்காக என்று சொன்னால் எங்களை கொலை செய்து புதைத்தவர்களிடையே போய் நீதியை கேட்பதில் எந்தவித அரத்ததமும் இல்லை என தெரிவித்தார் ஐபிசி தமிழ் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன்.
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பேரணிக்கு பின்னர் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி என்புக்கூடுகளை பாதுகாக்கவேண்டும்
செம்மணியில் 600 ற்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மீட்கப்பட்டள்ளன. அவற்றை பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.அதைக்கூட இல்லாமல் செய்வதற்கும் அவற்றை நீர்த்து போகச் செய்வதற்குமான யுக்திகள் இங்கே கையாளப்படும்.எனவே அவை உரிய முறையில் பாதுகாக்கப்படகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க, தேர்தலி பிரசாரத்திலே வைத்த கோரிக்கை இந்த நாட்டிலே இனவாதம் மற்றும் மதவாதம் இருக்கக்கூடாது இந்த நாடு ஒருமித்த நாடாக எல்லோருக்குமான நாடாக இந்த நாட்டை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் அவருடைய தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருந்தன.
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
இந்த நாட்டிலே பாரிய குண்டுத்தாக்குதல் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.அனுர குமார ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்களை அதற்கு துணை நின்றவர்களை அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏராளமானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி இன்று சிலர் சிறையில் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.
அதேநேரத்தில் இந்த நாட்டில் வாழக்கூடிய தமிழர்களாகிய நாங்கள் 1958 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தாலும் அதன் இராணுவத்தாலும் கொன்று குவித்தும் காணாமல் ஆக்கப்பட்டம் இன்று செம்மணி போன்ற பல இடங்களில் எச்சங்களாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இலங்கைத்தீவிலே எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எங்களுக்கான நீதி ஒருபோதுமே சாத்தியமில்லை. இதை முதலில் எமது தமிழ் பேசும் மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
இரண்டு இனங்களுக்கான மோதல் இங்கு நடைபெற்றது.அந்த மோதலில் எங்களை கொன்று குவித்த அவர்களிடமே போய் இதை விசாரித்து நீதி தாருங்கள் என்று கேட்பது ஒரு மடைமைத்தனமான வேலையாகத்தான் இருக்கும்.
அதனால்தான் நாங்கள் சர்வதேச ரீதியாக அங்கே கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வேண்டி நிற்கின்றோம்.சர்வதேச ரீதியாக இந்த நீதியை கொண்டுவரவேண்டுமாக இருந்தால் தமிழர் தரப்பிலே முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.அதுதான் தமிழராகிய நாம் எல்லோரும் ஒன்றுபடவேண்டும்.ஒரு குடையின் கீழ் வரவேண்டும். ஒருமித்த கோரிக்கையாக இந்த புலம்பெயர்ந்த தேசங்களுக்கு எமது கோரிக்கையை வைக்கவேண்டும்
எம்மவர்களில் சிலர் உள்ளக விசாரண போதும் என்ற பொறிமுறைக்குள்ளும் பலகட்சித்தலைவர்கள் இல்லை இதற்கு சர்வதேச விசாரணை தான் தீர்வு என்ற பட்சத்திலும் இங்கே ஒரு மாறுபட்ட கருத்துக்கள் எமது இனத்திற்குள்ளேயே இருக்கின்றது.
இதை எல்லாம் முற்றாக களைந்து ஒரு ஒன்றுபட்ட இனமாக தமிழருடைய எத்தனை உயிர் இழப்புக்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச விசாரணையே ஒரே ஒரு பொறிமுறை என்ற அந்த கோட்பாட்டின் கீழ் அனைத்து தமிழர்களுகம் ஒன்றாக ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போமாக இருந்தால் நிச்சயமாக ஒருமாற்றம் எட்டும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
வென்றாக வேண்டும் எங்கள் நிலம் ஒன்றாக வேண்டும் தமிழர்கள் எங்களுடைய இலக்கு ஒன்றதான் இனத்தின் விடுதலை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

