• Login
Saturday, September 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இது கார் இல்ல நடமாடும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..! | Moving Fortresses on Delhi Roads: Inside Putin’s 598 HP Aurus Senat & Xi’s 18-Foot Hongqi N701 at BRICS Summit 2026”

GenevaTimes by GenevaTimes
September 12, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இது கார் இல்ல நடமாடும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..! | Moving Fortresses on Delhi Roads: Inside Putin’s 598 HP Aurus Senat & Xi’s 18-Foot Hongqi N701 at BRICS Summit 2026”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது கார் இல்ல நடமாடும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..!

BRICS உச்சி மாநாட்டிற்காக உலக தலைவர்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உலக நாடுகளின் கவனம் முழுவதுமே இந்தியா மீது தான் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் இந்தியா வந்துள்ளனர்.

பிரிக்ஸ் மாநாட்டிற்காக உலக தலைவர்களின் வருகை ஒட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஸீ ஜின் பிங் ஆகியோர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இவ்விருவரும் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உடன் தான் தரையிறங்கியுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரிய கவனம் பெற்றுள்ளது இவ்விருவரின் கார்கள் தான்.

இது கார் இல்ல நடமாடும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..!

இவை வெறும் கார்கள் மட்டுமல்ல நடமாடும் ராணுவம் என கூறும் அளவுக்கு பாதுகாப்பு அரண்களாக திகழ்கின்றன. ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஸீ ஜின் பிங் ஆகியோருக்கு பல நாடுகள் எதிரிகளாக உள்ளன. இதனால் எங்கு சென்றாலும் அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் தான் கார்கள் கூட விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

ரகசிய தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் இந்த புல்லட் ப்ரூஃப் கார்கள் வெறும் சொகுசு வாகனங்கள் அல்ல, உயர் ரக துப்பாக்கி சூடுகள், வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் இரசாயன தாக்குதல்களை கூட தாங்க கூடிய நடமாடும் ராணுவ மையங்களாக உள்ளன.

புதினின் ஆரஸ் செனட் (Aurus Senat): ரஷ்ய அதிபருக்கென பிரத்யேகமாக ரஷ்யாவின் NAMI நிறுவனத்தால் இந்த ‘ஆரஸ் செனட்’ வாகனம் உருவாக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு புதினின் பதவியேற்பு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம், அவரின் பழைய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு பதிலாக அதிகாரப்பூர்வ அரசு வாகனமாக மாற்றப்பட்டது. இந்த வாகனம் VR8/VR10 அளவிலான வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடுகளை தாங்கும் திறன் கொண்டது. எந்த தாக்குதல் நடந்தாலும் காரின் உள்ளே இருப்பவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் பலத்த எஃகு கவசமாக வடிவமைகப்பட்டுள்ளது.

சுமார் 6 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட பல அடுக்கு குண்டு துளைக்காத கண்ணாடிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை நேரடி தாக்குதல்களை உள்வாங்கி தடுத்து, கண்ணாடி துகள்கள் உள்ளே சிதறாமல் பாதுகாக்கும்.

Run-Flat Tyres என்ற பலம் வாய்ந்த சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு டயர்கள், முற்றிலுமாக காற்றழுத்தம் குறைந்தாலோ அல்லது துளைக்கப்பட்டாலோ கூட கார் தொடர்ச்சியாக பயணிக்க உதவும். இதன் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 எஞ்சின், தோராயமாக 598 குதிரைத்திறனையும் (Horsepower) 880 Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த அதீத சக்தி, பல டன் எடை கொண்ட இந்த வாகனம் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து உடனடியாக மின்னல் வேகத்தில் தப்பிக்க உதவுமாம்.

காரில் உள்ளே பிரத்தியேக தகவல் தொடர்பு மையம் செயல்படுகிறது. இதன் மூலம் அதிபர் புதின் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் தனது ராணுவ மற்றும் அரசு கட்டளை மையங்களுடன் எப்போதும் இணைப்பில் இருக்க முடியும்.

இது கார் இல்ல நடமாடும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..!

ஸீ ஜின் பிங் ஹோங்கி N701 (Hongqi N701): சீன அதிபர் ஜின்பிங், FAW குரூப் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஹோங்கி பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்ட ஹோங்கி N701 என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். 5.5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த வாகனம் முழுக்க முழுக்க அரசு முறை பயணங்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது.

இதன் தொழில்நுட்ப விவரங்களை சீன அரசு இரகசியமாக வைத்துள்ளது. இருப்பினும், அதிக வேகத்தில் பாயும் ஏவுகணைகள் மற்றும் காருக்கு அடியில் நிகழும் சிறிய அளவிலான வெடிமருந்து தாக்குதல்களையும் தாங்கக்கூடிய கனரக கவச தட்டுகள் இதில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலத்த குண்டு துளைக்காத கண்ணாடிகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, உயிரியல் அல்லது இரசாயன ஆயுத தாக்குதல்கள் ஏற்படும் போது, காரின் உட்பகுதியை முற்றிலுமாக காற்று புகாதவாறு அடைத்து, வெளிப்புற காற்றை வடிகட்டி உள்ளே சுத்தமான காற்றை வழங்கும் அதிநவீன ஏர்-கம்ப்ரஷன் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் இதில் உள்ளது. உலக தலைவர்களின் இந்த அதிநவீன வாகனங்கள் வெறும் சொகுசுக்கானவை அல்ல, அரசியல் சூழலில் எந்தவொரு எதிர்பாராத ஆபத்தையும் எதிர்கொள்ளும் அசைக்க முடியாத கோட்டைகளாக வலம் வருகின்றன.

Share This Article

English summary

Moving Fortresses on Delhi Roads: Inside Putin’s 598 HP Aurus Senat & Xi’s 18-Foot Hongqi N701 at BRICS Summit 2026”

இது கார் இல்ல நகரும் ராணுவம்..! பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெற்ற புதின், ஸீ ஜின்பிங் கார்கள்..! / Russian President Vladimir Putin and Chinese President Xi Jinping arrived in New Delhi for the BRICS Summit 2026 in their heavily armoured state limousines—the Aurus Senat and Hongqi N701 respectively.

Story first published: Saturday, September 12, 2026, 13:35 [IST]

Other articles published on Sep 12, 2026

Read More

Previous Post

தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளி… ஸ்வப்னா சுரேஷ் மூன்றாவது திருமணம்! – மணமகன் யார் தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

Next Post
போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin