
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில், இது குறித்த வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வௌ்ளிக்கிழமை (11) காலை ஆஜரானார்.
இதே பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி எய்க் மார்ஷல் (ஓய்வுபெற்ற) ரோஷன் குணதிலக்க எஃப்சிஐடியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த மறுநாள் கோட்டாபய ராஜபக்சவின் இந்த வருகை நிகழ்ந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படைக்காக மிக்-27 (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் (Overhaul) நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் மற்றும் அரசு நிதியைத் கையாடல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்துகிறது.

