ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், அமெரிக்காவை இந்தியா நம்பவில்லை. அமெரிக்காவை வழிநடத்துவதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்காவை இந்தியா பலவீனமாகப் பார்க்கிறது. அதனால், புத்திசாலித்தனமாக விளையாடுவதாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இந்தியா இருக்கிறது. ஏனென்றால் ரஷ்யாவிடமிருந்துதான் அதிகப்படியான ராணுவ உபகரணங்களை அவர்கள் பெறுகிறார்கள். எனவே, நாங்கள் எங்கள் பலவீனத்தை துரத்திவிட்டு மீண்டும் அமெரிக்காவை வழிநடத்தத் தொடங்கும்போது, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் மீண்டும் வரும்.
உலக பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானும், இந்தியாவும் தற்போது பில்லியன் டாலர்களில் பங்காற்றுகின்றன. அப்படியிருக்க, சீனாவைச் சார்ந்திருக்கக் கூடிய தேவை குறைகிறது. எனவே, அமெரிக்கா தனது கூட்டணிகளை உருவாக்கத் தொடங்க வேண்டும். அதேசமயம், நிதி ரீதியாக அவர்கள் (சீனா) நல்ல நிலையில் இல்லை. அவர்களின் அரசு அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நீங்களே பார்க்கிறீர்கள். மேலும், பல ஆண்டுகளாக அவர்கள் எங்களுடன் போருக்குத் தயாராகி வருகின்றனர். அது அவர்களின் தவறு” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY