
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ward பகுதிக்கு உள்ளேயும் சுற்றியும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவுகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் செனக பலேதென்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவைச் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ward பகுதிக்கு உள்ளேயும் சுற்றியும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பலேதென்ன தெரிவித்தார்.

