
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சூரியனின் தெற்கு நோக்கிய தோற்றப் பெயர்ச்சியின் போது, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கான மத்திமக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
இன்று (07) மதியம் 12:08 மணிக்கு காலி, அங்குளுஹக, ,மதுவ, தெலிஜ்ஜவில, யட்டியான மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கிறது.

