போபால், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் செய்த நற்செயலுக்காக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி என்று பரவலாக அறியப்படுகிறார். பிட்டு தனது சொந்த ஊரான பியாவோராவில் முற்றிலும் மாசடைந்து, குப்பைக் காடாக காட்சியளித்த அஜ்னார் ஆற்றை அரசு அல்லது உள்ளூர் நிர்வாகத்தின் எந்தவொரு உதவியுமின்றி, தனது சொந்த சேமிப்பைக் கொண்டு தனியாளாகச் சுத்தம் செய்து சாதித்துள்ளார்.



