ஐரோப்பாவையும் இந்தியாவையும் இஸ்ரேலையும் அச்சுறுத்தும் வகையில்
ஐரோப்பாவின் எல்லையில் மிகவும் அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு உருவாகும் இராணுவ சக்தி ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்ல. மாறாக துருக்கியே அந்த இராணுவ சக்தியாகும்.
ஒரு காலத்தில் தனது ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நம்பிக்கொண்டிருந்த நாடு.இன்று ட்ரோன்கள் முதல் நவீன போர்க்கப்பல்கள் வரை ஏவுகணைகள் முதல் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வரை தனக்கு தேவையான ஆயுதங்களை தானே உருவாக்கும் திறனில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதனை விட முக்கியமாக துருக்கி தனது இராணுவ பலத்தை தனது சொந்த பாதுகாப்பக்காக மட்டும்தான் கட்டியெழுப்புகிறா அல்லது ஐரோப்பா,மத்திய கிழக்கு, கருங்கடல், மத்திய தரைக்கடல் ஆகிய அனைத்திலும் தனர் செல்வாக்கை விரிவுபடுத்தும் மிகப்பெரிய திட்டம் அந்த ஆயுத எழுச்சியின் பின்னால் இருக்கின்றதா?
ஐரோப்பவை பதற்றமடையச் செய்யும் துருக்கியின் இந்த இராணுவ மாற்றம் எப்படி சாத்தியமானது.
துருக்கியின் இந்த அசுர வளர்ச்சியை தடுக்க இந்தியாவும் இஸ்ரேலும் ஐரோப்பாவும் என்ன செய்யப்போகின்றன?
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

