இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்
அத்துடன் குறித்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் வகையிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை.

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படாது என்றே நாம் நம்புகிறோம். இருப்பினும், அது தேவை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாம் அதனை நடத்துவோம்.
இதற்கான முடிவு மூன்று வாரங்களுக்குள் தெரியவரும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

