Last Updated:
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3ஆவது வர்த்தக நாளாக சரிவுடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76 ஆயிரத்து 471 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கி, அதிகபட்சமாக 700 புள்ளிகள் வரை சரிவை எதிர்கொண்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மாலையில் சற்று ஏற்றம் கண்ட சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 373 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 570 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

