அவரது பணி வாழ்க்கையில், அவர் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்து, இறுதியில் ஏர் மார்ஷலாகவும், பின்னர் தலைமைத் தளபதியாகவும் (Commander-in-Chief) பொறுப்பேற்றார். குறிப்பாக ஜிதேந்திர மிஸ்ரா, டிசம்பர் 6, 1991 அன்று ‘ஃப்ளைட் லெப்டினன்ட்’ (Flight Lieutenant) ஆகவும், பின்னர் மே 5, 2003 அன்று ‘விங் கமாண்டர்’ (Wing Commander) ஆகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் மார்ச் 2, 2009 அன்று ‘குரூப் கேப்டன்’ (Group Captain) ஆகவும், ஜூன் 17, 2013 அன்று ‘ஏர் கமாடோர்’ (Air Commodore) ஆகவும் பதவி உயர்வு பெற்றார். ஜூலை 1, 2019 அன்று ‘ஏர் வைஸ் மார்ஷல்’ (Air Vice Marshal) ஆன ஜிதேந்திர மிஸ்ரா, ஜனவரி 1, 2023 அன்று ‘ஏர் மார்ஷல்’ (Air Marshal) பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானப்படையில் இருந்து ஜிதேந்திர மிஸ்ரா ஓய்வு பெற்றார்.

