காத்மாண்டு, நேபாளத்திற்கு நிதியுதவி வேண்டாம்.. நீதி மற்றும் இழப்பீடு வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார்.
திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ம் தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள், மண், சேறு – சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.



