• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அந்தர் பல்டி.. 6 நாளில் தங்கம் விலை 9000 ரூபாய் சரிவு.. வெள்ளி விலை 15000 ரூபாய் சரிவு.. என்ன நடக்குது! | Gold Plunges ₹9,000 and Silver Drops ₹15,000 in Just 6 Days: Market Analysis & Retail Outlook

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அந்தர் பல்டி.. 6 நாளில் தங்கம் விலை 9000 ரூபாய் சரிவு.. வெள்ளி விலை 15000 ரூபாய் சரிவு.. என்ன நடக்குது! | Gold Plunges ₹9,000 and Silver Drops ₹15,000 in Just 6 Days: Market Analysis & Retail Outlook
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அந்தர் பல்டி.. 6 நாளில் தங்கம் விலை 9000 ரூபாய் சரிவு.. வெள்ளி விலை 15000 ரூபாய் சரிவு.. என்ன நடக்குது!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து முதலீட்டாளர்கள், நகை வாங்குவோர் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. பிரதமர் நரேந்திர மோடி இன்று இன்ஸ்டாவில் பகிர்ந்த செல்ஃபி வீடியோவில் 2வது முறையாக நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

மோடியின் வீடியோவால் பெரும்பாலான நகை கடைகளின் பங்குகள் இன்று சரிவை எதிர்கொண்ட நிலையில், தங்கம்,வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு என்பது சந்தையில் டிமாண்டை அதிகரித்து வர்த்தகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தர் பல்டி.. 6 நாளில் தங்கம் விலை 9000 ரூபாய் சரிவு.. வெள்ளி விலை 15000 ரூபாய் சரிவு.. என்ன நடக்குது!

தங்கம் விலை

கடந்த ஆறு நாளில் 24 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.9,000 குறைந்துள்ளது. IBJA வெளியிட்டுள்ள தரவின்படி, ஆகஸ்ட் 24ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் மாலை விலை 10 கிராமுக்கு ரூ.1,62,154 ஆக இருந்தது. செப்டம்பர் 1ஆம் தேதி மாலை விலை ரூ.1,53,183 ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.8,971 சரிந்துள்ளது. இதை சதவீத அடிப்படையில் பார்க்கும் போது இது சுமார் 5.5% சரிவாகும்.

செப்டம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று காலையில் மட்டும் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,54,798 ஆக இருந்தது. மாலை நேரத்தில் இது ரூ.1,53,183 ஆகக் குறைந்தது என IBJA தரவுகள் கூறுகிறது. அதாவது ஒரே நாளில் காலை விலையிலிருந்து மாலை விலை வரை ரூ.1,615 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையிலும் கடந்த 6 நாட்களில் பெரும் சரிவு பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வெள்ளியின் மாலை விலை ஒரு கிலோவுக்கு ரூ.2,45,391 ஆக இருந்தது. செப்டம்பர் 1ஆம் தேதி அது ரூ.2,30,419 ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.14,972 சரிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 6.1% வீழ்ச்சியை வெள்ளி பதிவு செய்துள்ளது.

மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி காலையில் வெள்ளி விலை ரூ.2,35,488 ஆக இருந்த நிலையில், மாலையில் ரூ.2,30,419 ஆகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் ரூ.5,069 சரிவு ஏற்பட்டுள்ளது. IBJA வெளியிட்டுள்ள தரவுகள் மும்பை சந்தையை சார்ந்து.

சென்னை ரீடைல் சந்தை விலை

செப்டம்பர் 24ஆம் தேதி 22 கேரட் கிராம் தங்கம் விலை சென்னையில் 15,030 ரூபாயில் இருந்து இன்று 14175 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் 855 ரூபாய் வரையில் இந்த 6 நாளில் குறைந்துள்ளது, இதுவே 10 கிராமுக்கு 8,550 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் வெள்ளி விலை ஒரு கிலோ 2,75,000 ரூபாயில் இருந்து இன்று வர்த்தகம் முடியும் போது 2,50,000 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் வெள்ளி விலை 25000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

ஈரான் போர், அமெரிக்க மத்திய வங்கியின் எடுக்கும் முடிவுகள் என பல்வேறு காரணத்தால் தங்கம் விலை ஆகஸ்ட் மாதம் முதல் பாதியில் தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்து வந்தது. ஆனால் பெடரல் ரிசர்வ் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் உயர்த்துவது குறித்த கருத்துக்கள் வெளியான பின்பு தற்போது தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், தற்போதைய சரிவு தற்காலிகமான விலை திருத்தமா அல்லது தங்கம் மற்றும் வெள்ளியின் போக்கில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமா என்பதை சந்தை நகர்வுகள் தான் தீர்மானிக்கும்.

Share This Article

English summary

Gold Plunges ₹9,000 and Silver Drops ₹15,000 in Just 6 Days: Market Analysis & Retail Outlook

Gold Plunges ₹9,000 and Silver Drops ₹15,000 in Just 6 Days: Market Analysis & Retail Outlook — அந்தர் பல்டி.. 6 நாளில் தங்கம் விலை 9000 ரூபாய் சரிவு.. வெள்ளி விலை 15000 ரூபாய் சரிவு.. என்ன நடக்குது!

Story first published: Tuesday, September 1, 2026, 22:42 [IST]

Other articles published on Sep 1, 2026

Read More

Previous Post

இளம்பெண் சடலத்துடன் அத்துமீறல்.. சைக்கோ மெக்கானிக் செய்த கொடூரம்.. தெலங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Miss Equality World அமைப்புடன் தொடர்புடைய மலேசியரை JAKIM விசாரணைக்கு அழைக்கிறது – Malaysiakini

Next Post

Miss Equality World அமைப்புடன் தொடர்புடைய மலேசியரை JAKIM விசாரணைக்கு அழைக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin