களுத்துறை மாவட்டம் – பாயாகலவின் நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

