பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 420 கிலோகிராம் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.