உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்தார்.
“உலகைப் பாதித்துள்ள போர்ச் சூழலுக்குள், பொருட்களின் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் மூலம் சிறப்பு விலை உயர்வு அல்லது கட்டண உயர்வு ஏற்பட்டுள்ள ஒரு சூழல் உருவாகியுள்ளது.
ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள்
அவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. பொதுமக்களின் துன்பத்தைக் குறைப்பதற்காக, அரசாங்கம் என்ற முறையில், அமைச்சகங்கள், திணைக்களங்கள் மீது ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

மொனராகல பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன இவ்வாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

