காத்மாண்டு, கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்கு நடுவே மண்ணுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மண் மற்றும் இடிபாடுகளுக்குள் நடுவே சிக்கி புதைந்திருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



