இவர் தான் ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய தலைவரா.. அடிதூள்.. 24 மணிநேரத்தில் வந்த அப்டேட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வாங்கியாக திகழும் ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ-வான சசிதர் ஜகதீஷன் சனிக்கிழமை நடந்த நிர்வாக கூட்டத்தில் தனக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வேண்டாம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் சசிதர் ஜகதீஷன்.
ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் விரைவில் புதிய தலைவரை சேர்வு செய்யும் பணிகளை வேகப்படுத்த உள்ளதாகவும் நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்திற்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாற்ற தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த புதிய சிஇஓ..?

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இவ்வங்கியின் அடுத்த சிஇஓ பதவிக்கான முக்கிய உள்நிர்வாக நபராக தற்போது துணை நிர்வாக தலைவராக இருக்கும் கைசாத் பருச்சா-வின் பெயர் அடிப்படுகிறது. இதேபோல் அடுத்த சிஇஓ பதவிக்கு இரண்டு பெயர்களை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு பெயர் கைசாத் பருச்சா இடம்பெறுவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் ஹெச்டிஎப்சி வங்கி வெளியில் இருந்தும் ஒரு CEO வேட்பாளரை தேடி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், CEO பதவிக்கு ஒருவரை தேர்வு செய்யும் போது ஓரே நபரின் பெயரை பரிந்துரை செய்து தேர்வு செய்வது தவறு என்பதால், பலரை பரிந்துரரை செய்து அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி பின்னர் தேர்வு செய்ய வேண்டும் என்பது RBI விதிமுறையாகும்.
இந்திய வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக நியமனங்களுக்கு அவ்வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்தாலும், இறுதி ஒப்புதலை ஆர்பிஐ தான் கொடுக்கும்.

கைசாத் பருச்சா இவ்வங்கியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார், தற்போது ரீடைல் மற்றும் ஹோல்சேல் வர்த்தக பிரிவுகளை கவனித்து வருகிறார். இதேபோல் கைசாத் பருச்சா 2029 வரையில் பணியாற்ற (ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு) முடியும்.
ஹெச்டிஎப்சி வங்கி கடந்த சில மாதங்களாக பல்வேறு நிர்வாக பிரச்சனையின் காரணமாக பெரும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.
இதில் முக்கியமாக மகாராஷ்டிர சாலை வளர்ச்சி கழகத்தின் வைப்பு நிதியில் செய்த குளறுபடி, நான் எக்ஸ்கியூடிவ் சேர்மன் அதானு சக்கரவர்த்தி திடீர் ராஜினாமாவும் அவர் கூறிய கரணங்களும், காலாண்டு முடிவுகளில் வெளியான மொத்த வட்டி விளிம்பு குறைந்து, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தவறான திட்டங்களை பரிந்துரை செய்து பெரும் முதலீட்டு இழப்புக்கு தள்ளப்பட்டது என பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெளியானது.
அதனால் ஹெச்டிஎப்சி வங்கியில் சுமார் 40 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருந்த நிலையில் தற்போது 27 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் ரியாக்ஷனாக HDFC வங்கி பங்குகள் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 27.41 சதவீதம் சரிந்து இவ்விங்கியில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை கொடுத்தது.
ஹெச்டிஎப்சி வங்கியின் சரிவை தாங்கிப்பிடிக்க எல்ஐசி நிறுவனம் தனது பங்கு இருப்பை 4.11 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது, இதற்கு ஆர்பிஐ அனுமதித்துள்ளது.

