டிரம்ப் போட்ட திட்டம்.. அப்படியே நடக்குதே.. வெனிசுலா மொத்தமும் அமெரிக்காவுக்கு கைமாறுகிறது!!
டிரம்ப் உத்தரவின் பெயரில் அமெரிக்கா ராணுவம் தாக்குதலை நடத்தி இரவோடு இரவாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மன்ரோ-வீன் வீட்டை தாக்கி அவரையும், அவரது மனைவியையும் கைது செய்து நாடு கடத்திய நிலையில் அமெரிக்கா அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் கைப்பற்றி தற்போது இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமித்து வெனிசுலா அரசு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பல மாத ஆலோசனை, ஆய்வுக்கு பின்பு வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை மொத்தமாக கைப்பற்றும் மிக முக்கியமான ஒப்பந்த்தை டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அந்நாட்டுடன் செய்ய உள்ளது.

இந்த ஒப்பந்தம் திட்டமிட்டப்படி கையெழுத்தாகும் பட்சத்தில் வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தை அமெரிக்கா பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார் டிரம்ப்.
மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தற்போது அமெரிக்க தரப்பில் இருந்து மார்க் ருபியோ, பீட் செகத் மற்றும் வெனிசுலா தரப்பில் அந்நாட்டின் இடைக்கால அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையில் நடைபெற்று வருவதாக டிரம்ப் தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுக்குறித்து டெல்சி ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் இருக்கும் 17 எண்ணெய் வயலின் உற்பத்தி திறனை மேம்படுத்துவது மூலம் சுமார் 65 பில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த பணிகளுக்காக 100 பில்லியன் டாலர் முதலீடும், வெனிசுலா அரசுக்கு 209 பில்லியன் டாலர் அளவிலான வரியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை அமெரிக்க அரசு வெனிசுலா நாட்டின் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செய்ய திட்டமிட்டு உள்ளதால் தனி நிறுவனம் உருவாக்கப்பட்டு இந்த 17 எண்ணெய் வயலை மொத்தமாக கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த எண்ணெய் வயலை வெனிசுலா அரசு சுமார் 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்து உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் தனியார் நிறுவனத்தில் அமெரிக்க அரசு சுமார் 55 சதவீதம் பங்குகளை கொண்டு இருக்கும்.
உலகளவில் அதிக எண்ணெய் வயல்களை கொண்டு இருக்கும் நிறுவனத்தில் சவுதி ஆராம்கோ நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக இருக்கும் எனநும் கூறப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போருக்கு மத்தியில் இத்தகைய ஒப்பந்தம் செய்யப்படுவது சந்தையில் புதிய எண்ணெய் ஆதாரத்தை உருவாக்கி விலையை குறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. OPEC நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கவும் வெனிசுலா எண்ணெய் வளத்தை அமெரிக்கா பயன்படுத்தலாம்.
அமெரிக்காவுக்கு அடுத்த 100 வருடத்திற்கு அஸ்தான எண்ணெய் சப்ளையர் நாடாக வெனிசுலா இருக்க போகிறது. இதனால் அந்நாட்டின் எரிபொருள் சப்ளைக்கும், ஆதாரத்திற்கும் அடித்தளம் போட்டு உள்ளார் டிரம்ப்.
வெனிசுலா நாட்டில் மட்டும் சுமார் 303 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உள்ளது, உலகிலேயே இதுதான் மிகவும் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக உள்ளது. வெனிசுலாவை தாண்டி சவுதியில் 267 பில்லியன் பேரல், ஈரானில் 208 பில்லியன் பேரல், கனடாவில் 163 பில்லியன் பேரல், ஐக்கிய அரபு அமீரகத்தில் 113 பில்லியன் பேரல், குவைத் நாட்டில் 101 பில்லியன் பேரல், அமெரிக்காவில் 83 பில்லியன் பேரல் மட்டுமே உள்ளது. ரஷ்யாவில் 80 பில்லியன் பேரல் மட்டுமே உள்ளது.
அமெரிக்காவிடம் இருக்கும் 83 பில்லியன் பேரல் எண்ணெய் என்பது அந்நாட்டின் தேவையில் வெறும் 17 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
இதனால் எண்ணெய் வளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தனி நாடாக அமெரிக்காவிடன் நட்புறவில் இல்லாத வெனிசுலா, ஈரான் மீது கட்டம் கட்டி தாக்கி தற்போது கைப்பற்றி வருகிறது அமெரிக்க அரசு. இந்த கருத்து பல மாதங்களாக இருந்து வந்தாலும் இதை உறுதி செய்யும் வகையில் வெனிசுலாவில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

