• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இன நபர்கள்

கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள் | Secret Tower In Kilinochchi Night After Night

அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.


இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.


இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.


அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.


நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.

மக்களின் எதிர்ப்பு

குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள் | Secret Tower In Kilinochchi Night After Night

 காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.


ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.


ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.


மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.


ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

51 ஹெக்டேர் பரப்பளவிலான சதுப்புநிலத் தீ நான்கு நாட்களுக்குப் பிறகு அணைக்கப்பட்டது – Malaysiakini

Next Post

S-400 ஏவுகணைகளைக் கண்டுபிடிக்க இந்தியாவில் உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான்.. முன்னாள் அதிகாரி அதிர்ச்சித் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
S-400 ஏவுகணைகளைக் கண்டுபிடிக்க இந்தியாவில் உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான்.. முன்னாள் அதிகாரி அதிர்ச்சித் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

S-400 ஏவுகணைகளைக் கண்டுபிடிக்க இந்தியாவில் உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான்.. முன்னாள் அதிகாரி அதிர்ச்சித் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin