Last Updated:
டெல்லி பிரீமியர் லீக்கில் (DPL) விளையாடி வரும் 18 வயதான ஆர்யவீர் சேவாக்கிற்கு, இந்திய U-19 அணியில் இடம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக்கின் மகன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் (U-19) அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் (Anvay Dravid) மற்றும் வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் (Aaryavir Sehwag) ஆகிய இருவரும் இந்த அணியில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.


