சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள சித்ரகூட் அருவி இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. அதிரப்பள்ளி அருவியைவிட உயரத்திலும், அகலத்திலும் பெரிதாக இருக்கும் சித்ரகூட் அருவி, இந்தியாவின் நயாகரா என்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதேபோல், அதிரப்பள்ளியில் இல்லாத, அமெரிக்கா – கனடாவில் இருக்கும் நயாகராவைப் போல், சித்ரகூட் அருவியில் இருந்து ஓடும் நீரில், படகில் பயணித்து அந்த அருவியை அருகே சென்றும் அனுபவிக்கலாம்.

