Last Updated:
டெல்லியில் பிரியாணி சாப்பிட்டபோது ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது வெல்கம் பகுதி. இங்குள்ள கபூதர் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் கடந்த 21-ம் தேதி இரவு வழக்கம்போல் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஹோட்டலுக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், தலா ஒரு பிளேட் என 2 பிளேட் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். இருவரும் பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு முடித்துள்ளனர். சாப்பிட்டு முடித்ததும், ஹோட்டல் ஊழியர் ஈஹசான் அவர்களிடம் உணவுக்கான பணத்தை கேட்டுள்ளார்.


