Last Updated:
நேபாளம் சுற்றுலா சென்ற ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் நிலை குறித்தான தகவல் தெரியவில்லை என அவரது உறவினர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
நேபாளம் நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. நேபாளம் – திபெத் பகுதியில் கடும் மழை மற்றும் பனி பாறைகள் கரைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் மலை பகுதிக்கு கீழே இருந்த கிராமங்கள், பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

