• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்! | Parandur Airport Proposal Scrapped: CM Vijay Announces Alternate Location Strategy and Meenambakkam Expansion Plan

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்! | Parandur Airport Proposal Scrapped: CM Vijay Announces Alternate Location Strategy and Meenambakkam Expansion Plan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்!

இந்தியாவில் வேமாக வளர்ச்சி அடைந்து வரும் அனைத்து முக்கிய மாநிலமும் அதன் தலைநகரில் 2வது விமான நிலையத்தை அமைப்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது நீண்ட கால கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பரந்தூரில் 2வது விமான நிலத்தைச் சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டு, மத்திய அரசிடம் இருந்து பலகட்ட ஒப்புதல்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சட்டமன்றத்தில் பேசும் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்!

பரந்தூர்-க்கு முற்றுப்புள்ளி..

விஜய் தலைமையிலான அரசு பரத்தூர் திட்டத்தைக் கைவிடுகிறதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீட்டித்து வந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று காலை கூடியபோது, விதி 110-ன் கீழ் விஜய் இலவச சிலிண்டர், இலவச பேருந்து பயணம் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதும் முக்கியமான அறிவிப்பாக வெளியானது.

2வது விமான நிலையம் தொடரும்..

முதல்வர் விஜய்யின் அறிவிப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விஜய் தலைமையிலான அரசு சென்னையில் 2வது விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிடவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார தொழிற்துறை பகுதிகளின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் விமான பயணிகள் எண்ணிக்கை, சரக்கு விமான போக்குவரத்து சேவையை ஊக்குவிக்க புதிய விமான நிலையம் தேவை என்பதை அரசு மறுக்கவில்லை என சட்டமன்றத்தில் பேசினார் விஜய்.

எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடரும், ஆனால் அதற்கான இடம் மாற்றப்படும் எனவும் முதல்வர் விஜய் உறுதி அளித்தார்.

மீண்டும் மீனம்பாக்கம்..

இதேவேளையில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. இதை விரிவுபடுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என விஜய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வடமேற்குப் பகுதியில் விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் இதே விமான நிலையத்தில் கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் 5-வது டெர்மினல் அமைக்க மத்திய அரசின் கீழ் இயங்கும் AAI அமைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது 3வது டெர்மினல் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக உயரும். 5வது டெர்மினல் மூலம் கூடுதலாக 20 மில்லியன் மக்களை கையாளும் திறன் கிடைத்தால் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இந்த விமான நிலையம் மாறும் என விஜய் தெரிவித்தார்.

இதேவேளையில் சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பயணிகளின் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.

அதே நேரத்தில், சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் புதிய மற்றும் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் எனவும் விஜய் உறுதி அளித்தார்.

சிக்கல்

ஆனால் பரந்தூரில் திட்டமிடப்பட்ட விமான நிலையம் சுமார் 100 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருந்தது. பரந்தூர் விமான நிலையம் படிப்படியாகக் கட்டப்பட்டு 4 கட்டங்களாக 2047 முழுமையான சேவைக்கு கொண்டு வர திட்டமிட்டப்பட்டது.

ஆனால் தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 3வது டெர்மினல் கட்டப்பட்டு வரும் வேளையில் 5வது டெர்மினில் இதே 2046 காலக்கட்டத்தில் முடிக்கப்பட்டாலும் மொத்த பயணிகள் Capacity 55 மில்லியனாக மட்டுமே இருக்கும். இதனால் எப்படி மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெரிய விமானங்களை கையாளுவதற்கான போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தென்னிந்திய மாநிலத்தின் பிற முக்கிய விமான நிலையங்களை காட்டிலும் மிகவும் குறைவான பயணிகள் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. 2024-25 ஆம் நிதியாண்டில் 22.42 மில்லியன் பயணிகளை கையாண்ட மீனம்பாக்கம் விமான நிலையம் 2025-26ல் வெறும் 2.7 சதவீத வளர்ச்சியுடன் 23.02 மில்லியன் பயணிகளை கையாண்டது.

இதே வளர்ச்சியில் அதிகரித்தல் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கையாளும் திறன் 2047ல் 40.28 மில்லியன் பயணிகளாக மட்டுமே உயரும். இது அடுத்த 20 வருடத்திற்கு போதுமானதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Share This Article

English summary

Parandur Airport Proposal Scrapped: CM Vijay Announces Alternate Location Strategy and Meenambakkam Expansion Plan

Parandur Airport Proposal Scrapped: CM Vijay Announces Alternate Location Strategy and Meenambakkam Expansion Plan — பரந்தூர் விமான நிலையத்திற்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் மீனம்பாக்கம்.. விஜய் அதிரடி அறிவிப்பில் உள்ள சிக்கல்!

Story first published: Monday, August 24, 2026, 11:46 [IST]

Read More

Previous Post

கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

Next Post

சண்டகானில் உள்ள ஒரு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Next Post
சண்டகானில் உள்ள ஒரு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

சண்டகானில் உள்ள ஒரு வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin