நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாத நிலையில், ‘நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைச் சட்டம், 2013’-ன் கீழ் உள்ள நடைமுறைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. அதாவது, நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்படும்போது, தொடர்புடைய சட்டத்தின்படி அறிவிப்பு வெளியிடுதல், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் தகுதியுள்ள நில உரிமையாளர்களுக்குச் சட்டப்படி இழப்பீடு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

