• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்?  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்?  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்? 

டைட்டானிக் கப்பல் விபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்த இவர், இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ளார்.

உலகின் மிக வயதான நபரான பிரித்தானியாவைச் சேர்ந்த ஏதெல் கேட்டரிம் (Ethel Caterham) தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

1909ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று, இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் பிறந்த ஏதெல், தனது 117ஆவது பிறந்தநாளை, பிரித்தானியாவின் சர்ரே (Surrey) பகுதியில் உள்ள ‘ஹால்மார்க் லேக்வியூ கேர் ஹோம்’ (Hallmark Lakeview Care Home in Lightwater) முதியோர் இல்லத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கடந்த 21ஆம் திகதி கொண்டாடினார். 

117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

ஏப்ரல் 2025இல் 116 வயதான பிரேஸில் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிஸ்டர் ஈனா கனபாரோ லூகாஸ் (Sister Inah Canabarro Lucas) காலமானதைத் தொடர்ந்து, ஏதெல் கேட்டரிம் உலகின் மிக வயதான நபராக மாறினார்.

எட்வர்ட் மன்னரின் (King Edward VII) ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் கடைசி நபர் இவரே ஆவார். டைட்டானிக் கப்பல் விபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்த இவர், இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ளார்.

தனது 18ஆவது வயதில் (1927-இல்) இந்தியாவுக்குத் தனியாகப் பயணம் செய்த இவர், அங்கு ஒரு பிரித்தானிய இராணுவக் குடும்பத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

1931இல் பிரித்தானிய இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்த நார்மன் என்பவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் ஹாங்காங்கில் வசித்தனர். அங்கு அவர் ஒரு நர்சரி பள்ளியைத் தொடங்கினார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஏதெலுக்கு முன்பே இறந்துவிட்டனர். அவரது கணவர் நார்மன் 1976இல் காலமானார்.

ஏதெல் தனது பெற்றோருக்குப் பிறந்த 8 குழந்தைகளில் இரண்டாவது இளையவர் ஆவார். அவரது சகோதரிகளில் ஒருவரான கிளாடிஸ் (Gladys) என்பவரும் 104 வயது வரை நீண்ட காலம் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 97ஆவது வயது வரை ஏதெல் கார் ஓட்டி வந்துள்ளார். மேலும், 2020ஆம் ஆண்டில் தனது 110ஆவது வயதில் கொவிட்-19 (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து சாதனை படைத்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஏதெலின் 116ஆவது பிறந்தநாளுக்குப் பிறகு, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இவரை நேரில் சந்தித்தார். அப்போது, 1969இல் சார்லஸ் இளவரசராகப் பொறுப்பேற்ற நிகழ்வை நினைவு கூர்ந்த ஏதெல், “அப்போது அனைத்துப் பெண்களும் உங்கள் மீது காதலில் இருந்தனர், உங்களை மணக்க விரும்பினர்” என்று அவரிடம் வேடிக்கையாகக் கூறினார்.

இருப்பினும், வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழ்ந்த நபருக்கான சாதனையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் கால்மென்ட் (Jeanne Calment) என்பவர் வைத்துள்ளார். அவர் 122 ஆண்டுகள் மற்றும் 164 நாட்கள் வாழ்ந்து 1997இல் காலமானார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

Property Rights | உங்கள் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள முடியுமா? மறுத்தால் என்ன நடக்கும்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு! | வணிகம் போட்டோகேலரி

Next Post

பிறந்த குழந்தையை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்.. 4 கைகள், 4 கால்கள்! மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன | Unbelievable Birth in Madhya Pradesh.. Baby Born With 4 Arms, 4 Legs.. Doctors Shocked.. What Happened?

Next Post
பிறந்த குழந்தையை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்.. 4 கைகள், 4 கால்கள்! மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன | Unbelievable Birth in Madhya Pradesh.. Baby Born With 4 Arms, 4 Legs.. Doctors Shocked.. What Happened?

பிறந்த குழந்தையை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்.. 4 கைகள், 4 கால்கள்! மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன | Unbelievable Birth in Madhya Pradesh.. Baby Born With 4 Arms, 4 Legs.. Doctors Shocked.. What Happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin