• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கல்லூரி மாணவர்களுக்கு AI இலவசம்..! கூகுள் AI பிளஸ் திட்டத்தில் சேர்வது எப்படி? | Google AI plus Free for 1 Year: College Students in India & 140+ Countries Can Claim ₹4,000 Worth of Gemini Pro

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கல்லூரி மாணவர்களுக்கு AI இலவசம்..! கூகுள் AI பிளஸ் திட்டத்தில் சேர்வது எப்படி? | Google AI plus Free for 1 Year: College Students in India & 140+ Countries Can Claim ₹4,000 Worth of Gemini Pro
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்லூரி மாணவர்களுக்கு AI இலவசம்..! கூகுள் AI பிளஸ் திட்டத்தில் சேர்வது எப்படி?

உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் இந்திய கல்லூரி மாணவர்களுக்கு ஒரு டக்கரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் கல்லூரி பயிலும் மாணவர்கள் ஏஐ குறித்து தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை அன்றாடம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்கள் ஏஐ பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் கூகுள் நிறுவனம், இந்தியாவிலும் மற்றும் பிற நாடுகளிலும் உள்ள தகுதியான கல்லூரி மாணவர்களுக்கு தனது AI Plus எனப்படும் ஏஐ வசதியை ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும் வகையில் நவீன ஏஐ கருவிகளை வழங்கும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு AI இலவசம்..! கூகுள் AI பிளஸ் திட்டத்தில் சேர்வது எப்படி?

இந்த திட்டத்தில் தகுதியான மாணவர்கள் ஜெமினி ஆம்னி (Gemini Omni) வசதியை பெற முடியும். வழக்கமான ஏஐ பயனர்களை விட இரண்டு மடங்கு அதிகமான பயன்பாட்டு வரம்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கூடுதலாக 400 ஜிபி கிளவுட் சேமிப்பு வசதி எந்தவித கட்டணமுமின்றி ஒரு வருடத்திற்கு முழுமையாக கிடைக்கும்.

மேலும் விளம்பரமில்லாமல் இசை மற்றும் வீடியோக்களை விரும்பு மாணவர்களுக்காக, கூகுள் AI ப்ரோ (Google AI Pro) மற்றும் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) இணைந்த சிறப்பு தொகுப்பு குறைந்த விலையில் அதாவது 70 சதவீதம் வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

இத்துடன் Student Hub என்ற பெயரில் மாணவர்கள் தங்கள் படிப்பை ஒழுங்குபடுத்தவும், ஜெமினியின் கற்றல் கருவிகளை எளிதில் பயன்படுத்தவும் ஒரு பிரத்யேக மையம் உருவாக்கப்பட்டுள்ளது. Study Notebooks என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.மாணவர்களின் திறமைகளையும், அவர்கள் பின்தங்கியுள்ள பகுதிகளையும் கண்டறிந்து அதற்கேற்ப தனிப்பட்ட கற்றல் இலக்குகளுக்கு ஏற்ப சிறிய அளவிலான படிப்பு திட்டங்களை இது உருவாக்கும்.

மாணவர்கள் பயணத்தின்போதே குரல் வழி உரையாடல்கள் மூலம் ஆழமான ஆராய்ச்சி அறிக்கைகளை கோர ஜெமினி லைவ் என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.கல்லூரி பயிலும் மாணவர்கள் சாதாரணமாக இந்த சேவைகளை பெற 4000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இதனை கூகுள் இலவசமாக வழங்குகிறது. பட்டப்படிப்பு அல்லது சான்றிதழ் வழங்கும் தகுதியான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த சலுகையை பெற முடியும். கல்லூரி மாணவர்கள் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவையான SheerID மூலம் சரிபார்த்து இந்த சலுகையை பெறலாம்.

இதற்காக Google Oneஇல் மாணவர் சலுகை என்ற பக்கத்திற்கு சென்று, தங்களது தனிப்பட்ட கூகுள் கணக்கு மூலம் லாகின் செய்து மாணவர்கள் இந்த சலுகையை பெற்று கொள்ளலாம். நீங்கள் கல்லூரியில் படிப்பதை உறுதி செய்யும் வகையில் ஐடி கார்டு உள்ளிட்டவை கேட்கப்படலாம்.இந்தியாவில் உள்ள தகுதியான மாணவர்கள் இந்த சலுகையை டிசம்பர் 31, 2026 வரை பெற முடியும்.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், முறையான கற்றல் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும் இந்த ஏஐ கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Article

English summary

Google AI plus Free for 1 Year: College Students in India & 140+ Countries Can Claim ₹4,000 Worth of Gemini Pro

கல்லூரி மாணவர்களுக்கு AI இலவசம்..! கூகுள் AI பிளஸ் திட்டத்தில் சேர்வது எப்படி? / Google is giving eligible college students a free 12‑month Google AI Plus subscription (worth about ₹4,000 in India), including Gemini Omni, doubled usage limits, 400GB cloud storage, and new AI study features.

Story first published: Friday, August 21, 2026, 12:54 [IST]

Other articles published on Aug 21, 2026

Read More

Previous Post

செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

Next Post

விரைவுச்சாலையில் பசு மீது கார் மோதி விபத்து – ஆடவர் பரிதாப பலி! | Makkal Osai

Next Post
விரைவுச்சாலையில் பசு மீது கார் மோதி விபத்து – ஆடவர் பரிதாப பலி! | Makkal Osai

விரைவுச்சாலையில் பசு மீது கார் மோதி விபத்து - ஆடவர் பரிதாப பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin