ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.
பலவீனமான நிலையில் இருக்கும் புதனின் இந்த அமைப்பு செப்டம்பர் 18 வரை நீடிக்கும்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.
| மேஷம் |
- புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- அலுவகலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
- நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
- வேலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
- இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.
- இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- குறிப்பாக எந்த ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
|
| கன்னி |
- புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- பெரிய முதலீடுகள் எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வணிகர்கள் ஒப்பந்தங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- மொத்தத்தில் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
|
| சிம்மம் |
- புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இக்காலத்தில் உங்களுக்கு எதிராக மற்றவர்கள் செயல்படலாம்.
- எனவே அப்போது உடனடியாக அவசரப்பட்டு எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
- அலுவலகத்தில் தகராறுகளை பெரிதாக்கவோ அல்லது கவனக்குறைவாகவோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|
Read More