Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான குல்தீப் யாதவ் நீக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு பதிலாக சரன்ஸ் ஜெய்ன் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் கம்பீர் மற்றும் சுப்மன் கில் ஜோடியால் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், பவுலிங்கில் மானவ் சுதார் 10 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது.

இதன்பின் இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி அணி வென்றால், டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். முதல் போட்டியில் டாஸிலேயே இந்திய அணிக்கு முன்னிலை கிடைத்துவிட்டது. இருப்பினும் இலங்கை அணி இந்திய அணிக்கு சவால் கொடுத்தது.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்ய தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஸ்பின்னரான குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு புதிய வீரரான சர்ன்ஸ் ஜெய்ன் கொண்டு வரப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கான சரன்ஸ் ஜெய்னின் பயிற்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பவுலிங் பயிற்சியாளர் மற்றும் அனலிஸ்ட் உடன் சரன்ஸ் ஜெய்ன் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். 2வது இன்னிங்ஸில் குல்தீப் யாதவிற்கு போதுமான அளவிற்கு பவுலிங் செய்யவே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுப்மன் கில் கேப்டனானது முதலே இது தொடர்கதையாகி இருக்கிறது.
இதனால் குல்தீப் யாதவை வேண்டுமென்றே சுப்மன் கில் – கம்பீர் ஜோடி புறக்கணிக்கிறதா? பெஞ்ச் செய்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாத சூழலில், அட்டாக்கிங் ஸ்பின்னரான குல்தீப் யாதவை பெஞ்ச் செய்வது மிகப்பெரிய பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


