இனி ஏஐ பயன்படுத்தினால் வரி.. ரகுராம் ராஜன் கொண்டு வந்த திட்டம்.. ஆடிப்போன நிறுவனங்கள்!
உலகம் முழுவதும் யுனிவர்சல் பேசிக் இன்கம் என்ற விஷயத்தை பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் நிறுவனங்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஏஐ வரி என்ற புதிய யோசனையை முன்வைத்துள்ளார். இந்த ஐடி தற்போது உலகம் முழுவதும் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.
முதலில் Universal Basic Income என்பது என்னவென்றால் ஏஐ மூலம் பெரும்பகுதி பணிகள் ஆட்டோமேட் செய்யப்பட்ட பின்பு மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த போதுமான வருமானத்தை அடிப்படையாக அனைவருக்கும் கொடுப்பது மூலம் நுகர்வோர் சந்தையை இயக்கும் முயற்சி. இது ஏஐ மூலம் வேவைவாய்ப்பு சந்தை மொத்தமாக மாறிய பின்பு நடக்க கூடிய விஷயம்.

ஆனால் ராகுராம் ராஜன் சொல்லும் ஏஐ வரி இப்போதே விதிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தில் மனித ஊழியர் செய்யும் வேலையை ஏஐ எடுத்துக்கொள்ளும் போது அல்லது ஏஐ மூலம் Replace செய்யப்படும் போது இந்த ஏஐ வரி விதிக்க வேண்டும் என கூறுகிறார்.
Project Syndicate தளத்தில் எப்படி நிறுவனங்கள் ஏஐ மூலம் ஏற்படும் வேலைவாய்ப்பு சந்தை சீரழிவை தடுப்பது என்ற தலைப்பில் ராகுராம் ராஜன் எழுத்திய கட்டுரையில், ஒவ்வொரு நாட்டின் அரசும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏஐ டோக்கன்ஸ் அடிப்படையில் வரி விதிக்கலாம், இதேபோல் ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து ஊழியர்களை தக்க வைப்பதால் அதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது மூலம் எளிதாக Al Jobocalypse-ஐ தவிர்க்க முடியும் என எழுதியுள்ளார்.
ஒரு நிறுவனத்தில் ஒரு ஊழியர் பணியில் நியமிக்கப்படும் போது நிறுவனங்ள் பிஎப், ESI, ப்ரொபஷனல் டாக்ஸ், சோஷியல் செக்யூரிட்டி, CSR என பல வகையில் செலவு செய்கிறது. இதை நியாயமானதாகவும் பார்க்கிறோம். இதேபோல் ஒரு நிறுவனம் ஏஐ பயன்படுத்தி வேலைகளை முடித்து வருமானம் ஈட்டும் போது ஏஐ டோக்கன்கள் மீது வரி விதிக்கலாம்.
உதாரணமாக அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் social-security தொகையை செலுத்துகிறது. ஆனால் ஏஐ-க்கு எவ்விதமான கட்டணமும் செலுத்துவது கிடையாது எனவும் ரகுராம் ராஜன் உதாரணத்தோடு விளக்கினார்.
இந்த வரி மூலம் நிறுவனங்களை ஏஐ பயன்படுத்துவதை எப்போதும் நிறுத்தாது, இதேபோல் ஏஐ இயந்திரங்கள் பயன்பாட்டிற்காக வரி வசூலிக்கப்படும். உலகில் பெரும்பாலான நாடுகள் நிதி நெருக்கடியில் இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில் ஏஐ மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க ஒரு ஆயுதம், ஆதாரம் தேவை. இதற்காக தான் ஏஐ டோக்கன்ஸ் மீது வரி விதிக்க வேண்டும் என தெரிவித்தார் ரகுராம் ராஜன்.
இதன் மூலம் இனி ஆட்டோமேஷனும், வேலைவாய்ப்பு பாதிப்பும் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். இந்த ஏஐ வரி துவக்கத்தில் குறைவாகவும், காலப்போக்கில் அதிகரிக்காலம். இதேபோல் ஏஐ டோக்கன் கணக்கில் உள்நாடு ஏஐ மாடல் முதல் வெளிநாட்டு ஏஐ மாடல் வரையில் கணக்கில் எடுத்தால் மட்டுமே வேலைவாய்ப்பு பாதிப்பிற்கு முறையாக தீர்வு காண முடியும்.

