வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மூன்றாவது கும்பல் பெரஹரா வியாழக்கிழமை (20) வீதியுலா வந்தது.
இன்றைய மூன்றாவது கும்பல் பெரஹராவில் புனித தந்தத்தாது பேழையை சுமந்து செல்லும் பாக்கியம், ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப் படையைச் சேர்ந்த மியன் ராஜா யானைக்கு கிடைத்தது.
மியன் ராஜா யானை முதன்முறையாக புனித தந்தத்தாது பேழையை சுமந்து பெரஹராவில் பங்கேற்றமை இம்முறை பெரஹராவின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
மியன் ராஜா யானைக்கு துணையாக, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைப் படையைச் சேர்ந்த சிங்கராஜா மற்றும் புலதிசி ராஜா ஆகிய யானைகளும் பெரஹராவில் அணிவகுத்துச் சென்றன.



