• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதிய ஏடிஎம் ரூல்ஸ்.. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. அக்.1 முதல் மாறும் விதிகள் | New SBI ATM rules from October 1: Charges for withdrawals exceeding 4 transactions

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதிய ஏடிஎம் ரூல்ஸ்.. 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. அக்.1 முதல் மாறும் விதிகள் | New SBI ATM rules from October 1: Charges for withdrawals exceeding 4 transactions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Thursday, August 20, 2026, 11:15 [IST]

சென்னை: 4-க்கும் மேற்பட்ட முறை பணம் எடுப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. ஐந்தாவது முறை முதல் பணம் எடுக்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் ₹15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் மொத்தம் 4 முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். இந்த வரம்பைத் தாண்டி, கூடுதலாக எடுக்கப்படும் ஒவ்வொரு முறைக்கும் வங்கி ₹15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகையைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

உண்மையில் மக்கள் பாவம், தனது சொந்த பணத்தை கையில் வாங்கி வந்தவர்களிடம் கட்டாயம் வங்கியில் தான் வாங்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள்.. அப்படி உத்தரவு போட்டதால், வங்கி பக்கமே போகாத அத்தனை பேரையும் வங்கி என்ற சிஸ்டத்திற்குள் கொண்டு வந்தார்கள். அப்படி வங்கி சிஸ்டத்திற்குள் கொண்டு வந்த பின்னர், சிறிது காலம், எவ்வளவு வேண்டுமானாலும் ஏடிஎம்மில் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என்று அனுமதித்தார்கள்.

New SBI ATM rules from October 1 Charges for withdrawals exceeding 4 transactions

அதேபோல் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வங்கியில் தான் போடுவோம் என்றும் மாற்றினார்கள். எல்லாருமே வங்கிக்கு மாறிய பின்னர், வங்கிகள் சேவை கட்டணத்தை விதிக்க தொடங்கின. வங்கி ஏடிஎம்களை பராமரிக்க கட்டணம் வசூலித்தே ஆக வேண்டும் என்று கூறி புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வந்தனர். அதேபோல் வங்கியில் கணக்கு பயன்படுத்துபவர்கள் குறைந்த பட்ச கட்டணத்தை பராமரிக்கா விட்டால் அதற்கு அபராதம் போட்டார்கள். கடைசியில் மக்களிடம் வங்கிகளின் ஒவ்வொரு சேவைக்கும் காசு தான் பிரதானம் என்று மாற்றினார்கள்.

மற்ற சேவைகள் எல்லாம் வங்கிகளில் வாங்குவது நியாயம் என்றாலும், மக்கள் தனது சொந்த பணத்தை எடுக்கவே கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று ஒரு நாளும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அப்படியான சூழல் தான் இப்போது நிலவுகிறது. ஜிபே அல்லது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வங்கிகள், ஒருவர் தனது அக்கவுண்டில் பணம் எடுத்து அதனை ரொக்கமாக செலவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இது கருப்பு பணமுறைகேடுகளை தடுக்க மத்திய அரசு ஆரம்பித்தில் கொண்டு வந்தது. இன்றைய சூழலில் 10 லட்சம் அல்லது 12 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் தான் வருமான வரி என்றே நிலை இருக்கிறது. ஆனால் இப்போதும், அதே போன்ற கட்டுப்பாடுகளே தொடர்கிறது. இந்த கட்டுப்பாடுகளில் ஒவ்வொரு ஊரிலும் மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களே வருவார்கள்.

இது ஒருபுறம் எனில், ஏடிஎம்மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று வசூலித்து வந்த வங்கிகள், இப்போது அந்த எண்ணிக்கையிலும் கை வைத்துள்ளன. 4-க்கும் மேற்பட்ட முறை பணம் எடுப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி கணிசமான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. ஐந்தாவது முறை முதல் பணம் எடுக்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் ₹15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் மொத்தம் 4 முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். இந்த வரம்பைத் தாண்டி, கூடுதலாக எடுக்கப்படும் ஒவ்வொரு முறைக்கும் வங்கி ₹15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகையைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) என்றால் என்ன

பாரத ஸ்டேட் வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) என்பது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கும் சுமை இல்லாமல் ஒரு எளிய வங்கிக் கணக்கை விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தக் கணக்கில் அடிப்படை வங்கிச் சேவைகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் படிவத்தைப் பயன்படுத்தி கிளைகளிலிருந்தோ அல்லது ஏடிஎம்கள் மூலமாகவோ பணத்தை எடுக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி இவர்களுக்கு ரூபே ஏடிஎம்-கம்-டெபிட் கார்டை வழங்குகிறது, ஆனால் இந்தக் கணக்கில் காசோலைப் புத்தக வசதி எல்லாம் கிடையாது.

அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்களுக்குப் பல சேவைகள் இலவசமாகவே எஸ்பிஐ வழங்குகிறது.

சாதாரண ரூபே ஏடிஎம்-கம்-டெபிட் கார்டை வழங்குகிறது. அதற்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் இல்லாமை; அத்துடன் NEFT மற்றும் RTGS போன்ற வழிமுறைகள் மூலம் மின்னணு முறையில் பணம் வரவு வைக்க முடியும். மத்திய அல்லது மாநில அரசுகள் வழங்கிய காசோலைகளை பணமாக்க அல்லது அவற்றை அனுப்புவதற்கு கட்டணமில்லை.. அதேபோல் நீண்ட காலமாக செயல்படாத நிலையில் உள்ள கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எஸ்பிஐ கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை; இருப்பினும், கணக்கை மூடுவதற்கான கட்டணங்கள் வசூலிக்கிறது.

எஸ்பிஐயில் BSBD கணக்கைத் தொடங்குவதற்குச் சில தகுதி நிபந்தனைகள் இருக்கிறது. இத்தகைய கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர், எஸ்பிஐயில் வேறொரு சேமிப்புக் கணக்கை வைத்திருக்க முடியாது. ஏற்கனவே சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் BSBD கணக்கைத் தொடங்கினால், அவரது மற்ற சேமிப்புக் கணக்கை 30 நாட்களுக்குள் மூட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

English summary

SBI ATM rules : State Bank of India has decided to charge a fee for more than 4 withdrawals. From the fifth withdrawal onwards, customers will have to pay a fee of ₹15 plus GST. These new rules for savings accounts will come into effect from October 1.

Read More

Previous Post

ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த ‘மிக அழகான கொலையாளி’க்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post

உங்கள் திறமையை காட்ட தயாரா.? – முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

Next Post
உங்கள் திறமையை காட்ட தயாரா.? – முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு  அழைப்பு

உங்கள் திறமையை காட்ட தயாரா.? - முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin