Russia: விளாடிமிர் புதின் அறிவித்த மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு..!
உலகின் அடுத்த பெரிய சக்தியாக உருவெடுக்கப்போவது பிரிக்ஸ் நாடுகள் தான், இந்த நிலையில் விவசாய பொருட்கள் உலகளவில் எப்படி வர்த்தகம் செய்யப்பட வேண்டும், எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஆதிக்கம் பெறுவதற்கு பிரத்யேக தளத்தை உருவாகும் திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிமுகம் செய்துள்ளார்.
உலகளவில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் சுமார் 42 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது பிரிக்ஸ் நாடுகள். எப்படி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து OPEC, OPEC+ என அமைப்பை உருவாக்கி விலையையும், சப்ளையை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்கிறதோ அதேபோல் பிரிக்ஸ் நாடுகள் உலகளவில் விவசாய பொருட்கள் துறையில் ஆதிக்கம் செய்யும் வகையில் Grain Exchange என்ற தளத்தை உருவாக்க விளாடிமீர் புடின் இத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

Grain Exchange என்பது பிரிக்ஸ் நாடுகள் உற்பத்தி செய்யும் கோதுமை, சோளம், போன்ற உணவு தாணியங்கள், பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான தளமாக இருக்கும்.
விவசாய துறையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெகு சில நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செய்து வரும் வேளையில், அதன் விலை நிர்ணய ஆதிக்கத்தில் இருந்து விடுப்படவும், அதன் ஆதிக்கத்தை உடைக்கும் வண்ணம் இத்தளம் இருக்கும் என புடின் பிரிக்ஸ் நாடுகள் முன்பு இத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஜெய்பூரில் சமீபத்தில் நடத்த கூட்டத்தில் இத்திட்டம் சமர்பிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 12-13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்தில் இத்திட்டம் குறித்த முடிவுகளை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இதுக்குறித்து முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புடின் முதன் முதலில் இந்த யோசனையை 2024ல் அறிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை முக்கிய உறுப்பினராக இருந்தாலும் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகள் தான் உலகளவிய விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் 42 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது. இத்தளம் அறிமுகம் செய்யப்பட்டால் பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான உணவு பொருட்கள் வர்த்தகம் எளிதாகும், உலகளவில் விலை நிர்ணயம் செய்வதிலும் பெரும் பங்கீட்டை பெறும்.
தற்போது அமெரிக்காவில் Chicago Mercantile Exchange (CME), சீனாவில் Dalian Commodity Exchange (DCE) மற்றும் Zhengzhou Commodity Exchange (ZCE), பிரான்ஸ் மற்றும் ஐரோப்பில் Euronext Paris, இந்தியாவில் Multi Commodity Exchange (MCX), லண்டன் சந்தை என பல சந்தைகள் விவசாய பொருட்களுக்காக இயங்கி வந்தாலும் பிரிக்ஸ் நாடுகள் இணைந்தால் இதில் பெரும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
தற்போது சர்வதேச விவசாய பொருட்கள் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு விகிப்பது Chicago Mercantile Exchange (CME) தான்.

