ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வெளிநாடு செல்ல தடை
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், குறித்த இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

