• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிஐடி விசாரணை போதாது.. சிபிஐதான் வேணும்.. ஜார்க்கண்ட் மாணவர்கள் திட்டவட்டம்! ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி | Jharkhand students firm; CID probe not enough; only CBI will do, pressure mounts on Hemant Soren

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிஐடி விசாரணை போதாது.. சிபிஐதான் வேணும்.. ஜார்க்கண்ட் மாணவர்கள் திட்டவட்டம்! ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி | Jharkhand students firm; CID probe not enough; only CBI will do, pressure mounts on Hemant Soren
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Mani Singh S

Time
Published: Tuesday, August 18, 2026, 7:02 [IST]

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பணிந்த ஹேமந்த் சோரன் அரசு, அரசு பணியாளர் தேர்வு ஆணையமான JSSC-CGL தேர்வு மற்றும் டிடிபிஎல் (TDPL) மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்கு ஹேமந்த் சோரன் அரசுக்கு நன்றி தெரிவித்த போராட்டக்காரர்கள், 24 நாட்கள் கழித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என கூறியுள்ளனர். இது ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஜார்க்கண்டில் அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஜார்க்கண்ட் தலைநகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Jharkhand student protest

பணிந்தது ஜார்க்கண்ட் அரசு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தால் மத்திய அரசு பணிந்த நிலையில், ஜார்கண்ட் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே சென்றது. 20 ஆம் தேதி முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மானவர்கள் எச்சரித்து இருந்தனர். ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டும் என்று கூறினர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால் வழிக்கு வந்த ஜார்க்கண்ட் அரசு, அந்த மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வு ஆணையமான JSSC-CGL தேர்வு மற்றும் டிடிபிஎல் (TDPL) மூலம் நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார். மேலும், 2014 முதல் டிடிஎல்பி மூலம் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவித்தார்.

சிபிஐ விசாரணை வேண்டும்

ஆனால் தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக கூறினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறியதாவது:- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை எங்களின் போராட்டம் நடைபெறும்.

எங்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனாலும் இன்னும் போக வேண்டியுள்ளது. 24 நாட்கள் கழித்து எங்கள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை நாங்கள் ங்களுடைய பட்டினி போராட்டத்தை தொடருவோம்” என்றார்.

உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மானவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ஜார்க்கண்டில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்திய நிலையில், ராகுல் காந்தி, ஹேமந்த் சோரனை மாணவர்களை சந்தித்து பேசுங்கள் என்று கூறினார். இதையடுத்தே ஹேமந்த் சோரன் இறங்கி வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

English summary

Jharkhand student protest: Yielding to sustained protests by students in Jharkhand, the Hemant Soren government announced the cancellation of the JSSC-CGL examination and exams conducted through TDPL. While the protesters thanked the Hemant Soren government for this move, they stated that they would call off the agitation only if the case is handed over to the CBI.

Read More

Previous Post

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு…! வெளியான அறிவிப்பு

Next Post

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வட்டியாக கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம்! | Senior Citizen Saving Scheme | வணிகம் போட்டோகேலரி

Next Post
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வட்டியாக கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம்! | Senior Citizen Saving Scheme | வணிகம் போட்டோகேலரி

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வட்டியாக கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டம்! | Senior Citizen Saving Scheme | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin